Header Ads

  • BREAKING



    கேமராவை வீசிவிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட புகைப்படக் கலைஞர்.


    சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலின்போது, புகைப்படக் கலைஞர் ஒருவர் கேமராவை கீழே போட்டு விட்டு, காயமடைந்த குழந்தைகளை மீட்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. உள்நாட்டுப் போரினால், மேற்கு அலெப்போவிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியபோது, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றை படம்பிடிக்கச் சென்ற அபத் அல்காதர் ஹபக் ((Abd Alkader Habak)) என்ற புகைப்படக் கலைஞர், குழந்தைகள் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடியதைக் கண்டு துடித்துப் போனார். உடனடியாக கேமராவை கீழே போட்ட அவர் சக புகைப்படக் கலைஞர்களோடு மீட்புப் பணியில் இறங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளை ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தூக்கிச் சென்று காப்பாற்றினார். சின்னஞ்சிறு குழந்தைகளை படுகாயங்களுடன் கண்ட அவர், ஒரு கட்டத்தில் மனமுடைந்து மண்டியிட்டு அழத் தொடங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad