Header Ads

  • BREAKING



    மதுபானக் கடையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது.


    சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே, புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற பொதுமக்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையோரம் மூடப்பட்ட 6 மதுபானக் கடைகளிலிருந்த மதுபாட்டில்களை, பாலவாயல் கிராமத்தில் சோத்துப்பாக்கம் செல்லும் சாலையில் புதிய கட்டடத்தில் கடை அமைத்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் அக்கடையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, காவல் துறையினர், ஒருவார கால அவகாசத்தில் கடையை மூடுவதாக தெரிவித்துள்ளனர். அதையேற்க மறுத்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவே, போலீஸார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad