தில்லியில் தமிழக விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்.
தில்லியில் போராடும் தமிழக விவசாயிகள் இன்று சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அனைத்து நதிகளையும் நீர் வழிப் பயணத் திட்டத்தின் வாயிலாக இணைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர்மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை பிரதமர் மோடி ஏற்கும் வரை ஜந்தர்மந்தரை விட்டு வெளியேற போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க நாள்தோறும் பல்வேறு வழிகளில் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, 32ஆவது நாளான இன்று விவசாயிகள் சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை