Header Ads

  • BREAKING



    விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் தி.மு.க. – கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கைது.



    சென்னை சைதாப்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து பனகல் மாளிகை வரை ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவல்துறை தடுப்புகளை தகர்க்க முனைந்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    இதனைத் தொடர்ந்து முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad