Header Ads

  • BREAKING



    போலீஸார் மாணவர்கள் மோதலால் கலவர பூமியான புதுச்சேரி பல்கலைக்கழகம்.



    டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை, நிறவெறி தாக்குதல் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய், ‘‘இந்தியர்களிடம் நிறவெறி கிடையாது எனவும், கறுப்பர்களாக தென்னிந்தியர்களுடன் , வட இந்தியர்கள் வாழவில்லையா என்றும் தெரிவித்திருந்தார். திருவள்ளுவர் பெயரைக் கூறி தமிழகத்தை வட்டமிட்டிருந்த தருண் விஜய்யின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
    டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை, நிறவெறி தாக்குதல் என பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டின
    இது தொடர்பாக அல்ஜஸிரா தொலைக்காட்சிக்கு பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் பேட்டியளித்திருந்தார்
    இந்தியர்களிடம் நிறவெறி கிடையாது,தென்னிந்தியாவில் கறுப்பு நிறத்தவர்களுடன் வட இந்தியர்களான சேர்ந்து வாழ்வோம் என்றார் தருண் விஜய்
    திருவள்ளுவர் பெயரைக் கூறி தமிழகத்தை வட்டமிட்டிருந்த தருண் விஜய்யின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது
    இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றுக்காக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு தருண் விஜய் வந்திருந்தார். அவர் விழாவில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, இருக்கையில் இருந்து எழுந்த மாணவர்கள், “இனவெறியுடன் பேசிய தருண் விஜய்யே வெளியேறு” என்று முழக்கமிட்டனர். அப்போது, உள்ளே நுழைந்த போலீஸார், தங்களிடம் அவதூறான வார்த்தைகளில் பேசி முறைகேடாக நடந்துகொண்டதாக மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
    மாணவர்களின் முழக்கத்தை அடுத்து அரங்கினுள் புகுந்த காவல்துறையினர், மாணவ மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வெளியேற்றினர்.
    ஆனால், விழா நடைபெறும் அரங்கத்துக்கு வெளியே திரண்ட மாணவர்கள், தருண் விஜய்க்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். பல்கலைக்கழகத்துக்குள் துணைவேந்தரின் அனுமதி இல்லாமல் அரசியல்வாதிகளோ, காவல்துறையோ நுழைய முடியாத நிலையில் தருண் விஜய்யும், போலீஸாரும் வந்தது எப்படி என மாணவர்கள் கேள்வியெழுப்பினர்
    தருண் விஜய்க்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு தீவிரமடைவதை கண்ட போலீஸார், அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். சில மாணவர்களை ஆடைகள் கிழியும் அளவுக்கு அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர்.
    போலீஸார் மாணவர்களுக்கிடையேயான மோதலால் புதுச்சேரி பல்கலைக்கழகம் கலவர பூமியாக காட்சியளித்தது. மாணவர்களின் போராட்டம் மேற்கொண்டு மற்ற கல்லூரிகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக, பல்கலையை சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad