Header Ads

  • BREAKING



    பிரமாண்ட விளம்பரத்தால் பிரபலமான காசா கிராண்டே அனிருதன் காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

    அண்மையில் நாளிதழ்கள், திரையரங்களில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான செம்ம லைப் செம்ம பிரைஸ் என்ற பிரமாண்ட விளம்பரத்தை யாரும் மறந்திருக்க முடியாது
    காசா கிராண்டே என்ற இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக அருண்குமார் மற்றும் ஆர்.கே அனிருதன் ஆகியோர் உள்ளனர். இயக்குனர்களில் ஒருவரான அனிருதன் என்பவர் தான் தற்போது நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு பங்களாக்களையும், வில்லாக்களையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டி பல நூறு கோடிகள் லாபத்துக்கு விற்றுவரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான காசா கிராண்டெவின் நிர்வாக இயக்குனர் அனிருதன் கடந்த 2015 ஆம் ஆண்டு செம்மஞ்சேரியை சேர்ந்த குலசேகர் என்ற ரியல் எஸ்டேட் அதிபருடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார்.
    குலசேகருக்கு சொந்தமான பெருங்குடி திருவள்ளூர் சாலையில் உள்ள ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தில் இந்த நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்வது என்றும் அதற்கு பங்கு தொகையாக குலசேகருக்கு காசா கிராண்டே 20 கோடி ரூபாய் கொடுப்பது என்றும் ஒப்புக்கொண்டு அனிருதன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
    அனிரூதன் அந்த நிலத்துக்கு பவர் பெற்று பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் தனது பெயரில் அனுமதி பெற்று தனது நிறுவனத்தின் பேரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டினார். கட்டிடம் கட்டிய பின்னர் ஒப்பந்தபடி நிலத்தின் உரிமையாளரான குலசேகருக்கு எந்த பங்கும் வழங்கப்படவில்லை.
    இதுகுறித்து குலசேகர் அனிரூத்திடம் கேட்ட போது இந்த இடம் தனது பெயரில் உள்ளது என்றும் பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் தனது பெயரில் அனுமதி பெற்று கட்டடம் கட்டி இருப்பதாகவும், இதனால் பங்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
    இதனால் அதிர்ச்சியடைந்த குலசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்யாமல் வழக்கை கிடப்பில் போட்டனர். இதையடுத்து குலசேகர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆதாரங்கள் இருந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன் ? என்று நீதி மன்றம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து உடனடியாக காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அனிருதன் மீது ((465,468,471,420)) கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    இதையடுத்து இரவோடு இரவாக கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துவரப்பட்டார் காசா கிராண்டே அனிருதன். அவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்து நம்பிக்கை மோசடி செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அனிருதனை கைது செய்த காவல்துறையினர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வருகிற 18 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad