Header Ads

  • BREAKING



    பிரிட்டன்- சீனா இடையே தொடங்கியது, 12,000 கி.மீ தூர சரக்கு போக்குவரத்து.


    பிரிட்டன், சீனா இடையிலான 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சரக்கு ரயில்வே சேவை தொடங்கியுள்ளது. பிரிட்டன்- சீனா இடையே ரயில்பாதை மூலம் சரக்குகளை கொண்டு செல்ல ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக, லண்டனில் இருந்து, பீர்,விஸ்கி, பால்பவுடர், மருந்து பொருட்கள், உபகரணங்கள் ஆகிய சிறிய நுகர்பொருட்களை ஏற்றிக்கொண்டு, 88 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் ஒன்று கடந்த 10ஆம் தேதி புறப்பட்டது. பிரான்ஸ்,பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் வழியாக, 12 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து 20 நாட்களில் சீனாவின் யீவியூ நகரை அந்த ரயில் வந்தடைந்தது. கப்பலில் 10 ஆயிரம் முதல் 20ஆயிரம் கண்டெய்னர்கள் கொண்டு வரலாம் என்றாலும், அவை வந்து சேர்வதற்கு ஒரு மாதத்திற்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad