Header Ads

  • BREAKING



    சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டு சோதனை, கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்களால் பதட்டம்.


    சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு விமானநிலைய புறப்பாடு பகுதியில் 2 சூட்கேசுகள் கேட்பாரற்று கிடந்தன. இதனை அடுத்து அதில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்ற பீதியின் காரணமாக விமானநிலைய வளாகம் முழுவதும் பதட்டம் நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து சூட்கேசுகளை கைப்பற்றி பத்திரமாக எடுத்து சென்றனர். இதன் காரணமாக, 4 மணி நேரத்திற்குப் பின் விமான நிலையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad