Header Ads

  • BREAKING



    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.



    தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே மிக அதிக அளவிலான வெப்பம் நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த
    அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வேறு பகுதியில் இருந்து வரும் காற்றின் காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad