Header Ads

  • BREAKING



    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி.



    தென் மாவட்டங்களுக்கு போதிய பேருந்து இல்லாததால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி அடைந்தனர்.


    கோடை விடுமுறை காரணமாகவும், அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறையாக இருப்பதாலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு ஏராளமான பயணிகள் குவிந்தனர். மதுரை, திருச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை போன்ற இடங்களுக்கு போதிய பேருந்துகள் விடப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, பிக்பாக்கெட்காரர்களை கண்காணிக்கவோ போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். பேருந்துகள் இல்லாததால் அதிகாலை வரை ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே குடும்பத்துடன் காத்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad