Header Ads

  • BREAKING



    சீனாவில் நடைபெற்ற விமானக் கண்காட்சி.


    சீனா விமானக் கண்காட்சியில் விமானத்தின் இறக்கையில் வீரர்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம் செய்யும் காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். ஹெனான் மாகாணத்தின் சென்சவ் நகரில் ஆண்டுதோறும் விமானக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தொடங்கிய இந்த கண்காட்சியில் 42 விமானங்கள் பங்கேற்று சாதனைகளை நிகழ்த்திக் காட்டின. பிரிட்டனைச் சேர்ந்த பிரெட்லிங் ஜெட் டீம் அணியின் இரண்டு வீரர்கள் விமானத்தின் இறக்கையில் நின்று மயிர்க்கூச்செரியும் வகையில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். பிரெட்லிங் ஜெட் டீம் அணியினர் கடந்த 30 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சாகசங்களைப் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad