Header Ads

  • BREAKING



    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்.


    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முழுஅடைப்பு வெற்றிக்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு கருத்தரங்குகள் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு உடனடி ஒப்புதல் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் உடனடியாக முழுமதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடன்தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad