Header Ads

  • BREAKING



    அரசியல் கட்சிகள் அளிக்கும் நன்கொடைக்கு உச்சவரம்பை நீக்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு.



    அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்கான உச்சவரம்பை நீக்குவது, வெளிப்படைத் தன்மையை பாதிக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

    அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழரை சதவீதம் வரைதான் நன்கொடை வழங்க முடியும் என்ற விதியைத் தளர்த்தும் வகையில், நிறுவனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, எதிர்காலத்தில் இந்த நடவடிக்கை தேர்தலில் வெளிப்படைத்தன்மையை அழித்துவிடும் என்றார். ஒவ்வொரு நிறுவனமும் தனது லாப நட்ட கணக்கை அறிவித்து, அதில் எவ்வளவு தொகை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது என்று அறிவிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், புதிய சட்டத்தால் எந்தக் கட்சிக்கு நன்கொடை தரப்பட்டது என்பதை கணக்கில் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக தேர்தல் நேரத்தில் போலியான நிறுவனங்களின் பெயரால் பெரும் தொகை செலவிடப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த சட்டத்திருத்தத்தால் ஏற்படும் விளைவுகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக பரிசீலித்து வருவதாகவும் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad