Header Ads

  • BREAKING



    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சட்டத்திருத்தம்.


    வாக்காளருக்கு பணம் கொடுப்போர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனை தடுக்க சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என ஆணையம் கூறியுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் மட்டுமே தேர்தலில் தடை விதிக்கலாம் என சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad