Header Ads

  • BREAKING



    மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பொதுமக்களால் சிறைப்பிடிப்பு.



    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே, மருத்துவ கழிவுகள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
    காரியாபட்டி அருகே அ.முக்குளம் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று மருத்துவ கழிவுகள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை எரிக்கும் பணியை செய்து வருகின்றது. இதன் காரணமாக இப்பகுதியைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உப்புச்சத்து, நீரிழிவு நோய், ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்துவிட்டு திரும்பிய லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவ கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் எதுவும் அந்த சாலை வழியாக வரக்கூடாது என்று கோரிக்கையை ஏற்றதால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad