Header Ads

  • சற்று முன்



    துபாயில் இருந்து வந்த பாகிஸ்தான் உளவாளி விமான நிலையத்தில் கைது.


    பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏஜன்ட்டாக பணியாற்றும் ஒருவரை டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த முகமது அகமது சேக் ரபீக் என்பவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் டெல்லி விமான நிலைய சோதனையில் சிக்கினார். தாம் ஐ.எஸ்.ஐ ஏஜன்ட் என தாமாகவே அறிமுகம் செய்துக் கொண்ட அவர் தாம் இந்தியாவில் தங்க விரும்புவதாகவும் ஐ,எஸ். ஐ குறித்த பல ரகசியங்களை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad