Header Ads

  • BREAKING



    காஷ்மீரில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் பலி.



    காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பஞ்ச்காம் ((Panzgam)) என்ற இடத்தில் ராணுவ முகாமின் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை 4 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே அமைந்துள்ள இந்த முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்ற பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad