Header Ads

  • BREAKING



    கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது.



    கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவின் 10ஆவது நுழைவாயிலில் காவலாளிகள் ஓம் பகதூர், கிஷன் பகதூர் ஆகியோர் கடந்த 24ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று அதிகாலையில் அங்கு காரில் வந்த சிலர் பங்களாவிற்குள் நுழைய முயன்றனர். தடுக்க முயன்ற காவலாளிகளை அந்த கும்பல் தாக்கியதில், ஓம் பகதூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கிஷன் பகதூரை கட்டிப்போட்டுவிட்டு, மர்ம நபர்கள் தப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர் கழுத்தில் கிடந்த துண்டு மற்றும் வார்விக் தேயிலை தோட்ட பகுதியில் கிடைத்த வாகன நம்பர் பிளேட் அடிப்படையில் தனிப்படை ஒன்று கேரளா விரைந்தது. அங்கு வைத்து அம்மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார், எங்கு வைத்து கைது செய்யப்பட்டார், கொலைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பது பற்றிய விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad