Header Ads

  • BREAKING



    சவாலை சந்திப்போம், டெல்லியை கைப்பற்றுவோம்- மம்தா பானர்ஜி ஆவேசம்.


    சவாலை சந்திக்க தயார், டெல்லியை கைப்பற்றுவோம் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சபதம் எடுத்துள்ளார்.மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமீத்ஷா, 2019ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரசை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கான பொறுப்பை வங்காள பாஜக தலைவர்களிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் பிர்பாரா தொகுதியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு பதிலடி தரும் விதமாக டெல்லியை கைப்பற்றுவோம் என்று சவால் விடுத்துள்ளார். தமக்கு சவால் விடுப்போரின் சவாலுக்கு சவால் விடுக்க தயார் என்று மம்தா கோபத்துடன் கொந்தளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad