Header Ads

  • BREAKING



    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் பத்து பேர் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படை அதிரடி.


    சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் புர்காபல் – சிந்தகுவாவுக்கு இடையே மாவோயிஸ்டுகளின் எதிர்ப்பை மீறி பேஜி – கோர்கா – இஞ்சிராம் பகுதியில் அமைக்கப்பட்ட இணைப்புச் சாலையை திறக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது. விழாவுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டுனர். சுமார் 300 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியதில் பாதுகாப்பு படை வீர ர்கள் 25 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, பதிலடி நடவடிக்கையை பாதுகாப்பு படை தீவிரப்படுத்தியது. சுக்மா மாவட்டத்தின் காடுகளில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை. புதன்கிழமை அன்று மாவோயிஸ்ட்டுகள் பத்து பேரை சுட்டுத் தள்ளியது. அந்த காடுகளில் பதுங்கி உள்ள மாவாயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்வதாகவும் பாதுகாப்பு படை கூறியுள்ளது. இதனிடையே மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குநர் ஜெனரலாக ராஜீவ் ராய் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad