Header Ads

  • BREAKING



    கஞ்சாவை மருத்துவ நோக்கத்துக்கு பயன்படுத்த மெக்சிகோ நாடாளுமன்றம் ஒப்புதல்.


    கஞ்சாவை மருத்துவ நோக்கத்துக்கு பயன்படுத்த மெக்சிகோ நாடாளுமன்றக் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு 374 பேர் ஆதரவாகவும் 7 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 11 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை இதன்படி கஞ்சா பயிரை மருத்துவ மற்றும் அறிவியல் நோக்கத்துக்காக வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. கஞ்சாவை மருத்துவத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் பொதுக் கொள்கைகளை வடிவமைக்கவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மசோதா அதிபர் என்ரிக் பீனா நீட்டோவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad