Header Ads

  • BREAKING



    விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு நிதிஆயோக் குழு பரிந்துரை.


    வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, விவசாய விளைப் பொருட்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைப்பதற்குரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயிகளின் பயிர்களுக்குரிய விலையைப் பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் தலைமையில் இயங்கும் நிதி ஆயோக் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்த அவர் , விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் 2022ம் ஆண்டுக்குள் விவசாயம் மூலம் அரசு பெறும் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும் என்று நம்புவதாகவும் நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad