Header Ads

  • BREAKING



    பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவு.


    பிலிப்பைன்ஸ் நாட்டில் 6 புள்ளி 8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிலிப்பைன்சில் சனிக்கிழமை அதிகாலை 4 மணி 23 நிமிடங்களுக்கு மிண்டானோ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்படும்போது, மின் சேவை தடையானதால், மக்கள் இருளுக்குள்ளேயே அடித்துப் பிடித்து, தெருக்களில் ஓடி வந்து தஞ்சம் அடைந்தனர். நிலம் மேலெழும்பி பின், பக்கவாட்டில் பென்டுலம் போல் ஆடியது போன்று உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். கடலுக்கு அடியில் 53 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, கரையோரப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். கலன் (Galan) மற்றும் மலபதான் (malapadan) நகரங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உள்பட இருவர் காயமடைந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad