Header Ads

  • BREAKING



    ரயில்வேத் துறை தனியார்மயமாக்கல் இல்லை என சுரேஷ்பிரபு உறுதி.



    நஷ்டத்தை சமாளிப்பதற்காக ரயில்வேத் துறை தனியார்மயமாக்கப்படமாட்டாது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வேத் துறையை ஒருபோதும் தனியார்மயமாக்க முடியாது என்று தெரிவித்தார்.
    சாமானிய மக்களுக்கான, குறைந்த கட்டண சேவையளிக்கும் அமைப்பாக ரயில்வேத் துறை இனியும் தொடர முடியாது என்றும், அதனை தனியார்மயமாக்குவதுதான் புத்திசாலித்தனம் எனவும் கூறப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார். சராசரி இந்தியர்கள் தங்களது பயணங்களுக்கான கடைசிப் புகலிடமாக இந்திய ரயில்வேயை நம்பியுள்ளதாகவும், அவர்களுக்கு அத்தகைய சேவையை தொடர்ந்து அளிப்பதற்கான கடமையும், அதனால் ஏற்படும் இழப்புகளை ஏற்கவேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளதாக சுரேஷ் பிரபு மேலும் குறிப்பிட்டார். தனியார்மயமாக்கல் மூலம் ரயில்வே சந்தித்து வரும் எல்லா பிரச்னைகளையும் சரி செய்துவிடலாம் என்று நினைப்பது மிகவும் தவறு என்று அவர் மேலும் தெரிவித்தார். சாமானிய மக்களின் போக்குவரத்துக்கு உதவுவதால், லாபமற்ற வழித்தடங்களிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுரேஷ் பிரபு குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பானிலும் ரயில்வேத் துறையில் ஏற்படும் இழப்பை அரசே ஏற்பது போல, இந்திய ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்பை அரசுதான் ஏற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad