Header Ads

  • BREAKING



    யானை ஆசி வழங்க பணம் வசூலிப்பது யானைகளை வைத்து பிச்சை எடுப்பதற்கு சமம்: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.




    யானை ஆசி வழங்க பணம் வசூலிப்பது யானைகளை வைத்து பிச்சை எடுப்பதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு திருவிழாவிற்கு அனுப்பிய யானையை வைத்து பிச்சை எடுத்ததாக செய்திகள் வெளியாகின.இதனை அடுத்து வனத்துறை தலைமை அதிகாரி, சுமா என்ற யானையை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அனுமதியை நிறுத்திவைத்தார்.இதை எதிர்த்து யானை உரிமையாளர் சேகர் தெடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் மேலாண்மை பராமரிப்பு விதிகளின் படி யானைகளை வைத்து பிச்சை எடுக்க கூடாது என்ற விதிகளை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad