Header Ads

  • BREAKING



    தமிழக அரசு ஊழியர் போராட்டம் வாபஸ்.


    தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அரசு ஊழியர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த இரு தினங்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் புதன்கிழமை மாலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொள்வதாக அரசு ஊழியர் சங்கத்தலைவர் சுப்பிரமணி கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad