Header Ads

  • BREAKING



    டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்.



    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர்.
    சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை பகுதியில் பெண்களின் மேலாடையை கிழித்து அட்டூழியத்தில் ஈடுபட்ட குடிகாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கு காரணமான டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என எடப்பாடி வட்டாட்சியரை பெண்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
    பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் கடையை மூடவும் பெண்கள் கண்ணீர் மல்க வேண்டினர்.
    கன்னியாகுமரியில் மக்களுக்கு இடையூறு தரும் தனியார் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad