Header Ads

  • BREAKING



    தமிழகம் முழுவதும் நாளை இரண்டாம் கட்ட சொட்டு மருந்து முகாம்.


    தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் கட்ட சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இந்த முகாம் நாளை நடைபெறுகிறது. முதல் கட்ட முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க தவறிய பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க 1000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad