Header Ads

  • BREAKING



    3ம் உலகப்போர் உருவாகும் அபாயத்தைத் தூண்டும் விதமாக பேசும் டிரம்ப்.


    மூன்றாம் உலகப்போர் உருவாகும் அபாயத்தைத் தூண்டும் விதமாக பேசி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரியாவுடன் மிகப்பெரிய மோதல் உருவாகும் என தெரிவித்துள்ளார். சனிக்கிழமையோடு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை ஒட்டி சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்தார். அதில், வடகொரியாவுடன் கண்டிப்பாக பெரிய, மிகப்பெரிய மோதல் ஏற்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், அமைதி வழியில் இருநாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அது கடினமானதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். அதிபர் டிரம்பின் நேர்காணலில் சில உரையாடல் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad