Header Ads

  • BREAKING



    டி.டி.வி.தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி.


    இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற சுகேஷ் சந்திரசேகர ராவ் என்ற இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் நான்கு நாள் விசாரணைக்கு பிறகு நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர், டெல்லி தீஸ் ஹஸாரி (Tees Hazaari) நீதிமன்றத்தில், நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் பிற்பகல் 3 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடனடியாக டி.டி.வி.தினகரன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. டி.டி.வி.தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது என வாதிட்டார். டி.டி.வி.தினகரனை ஏற்கனவே 4 நாள் விசாரித்துவிட்டதாகவும், அவரை பல மணி நேரம் காக்க வைத்து துன்புறுத்தியதாகவும் கூறி போலீஸ் காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டி.டி.வி.தினகரனை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டும் என்பதால், 7 நாள் அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பூனம் சவுத்ரி, டி.டி.வி.தினகரனின் ஜாமீன் மனுவை ஏற்க மறுத்ததுடன், அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad