Header Ads

  • BREAKING



    டி.டி.வி தினகரனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை.



    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரன் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு பிற்பகல் 1 மணியளவில் டிடிவி தினகரன் கொண்டுவரப்பட்டார். பின்னர் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்ற அதிகாரிகள் அங்கு சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு டிடிவி தினகரனை அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர். பெசன்ட் நகரில் இருந்து டிடிவி தினகரனை அழைத்துச் செல்ல முயன்றபோது, அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் டிடிவி தினகரன் அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுகேஷ் சந்திரசேகரிடம் டிடிவி தினகரன் கொடுத்ததாக சொல்லப்படும் ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் பணம் எப்படி வந்தது என்பது தொடர்பாக சோதனையும், வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad