Header Ads

  • BREAKING



    விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார் டிடிவி தினகரன்.


    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்த டெல்லி போலீஸார், அவரை இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படும் டிடிவி தினகரனிடம், பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. டிடிவி தினகரனுடன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறார். சென்னை மட்டுமின்றி பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களுக்கு தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad