Header Ads

  • BREAKING



    சென்னையில் டிடிவி தினகரனிடம் 6 மணி நேரம் விசாரணை.



    டெல்லியில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்ட தினகரனிடம் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
    இரட்டை இலைச் சின்னத்தைப் பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில், டெல்லியிலிருந்து தினகரன் நேற்று சென்னை அழைத்துவரப்பட்டார். பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள மத்திய அரசு விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் தங்கவைக்கப்பட்டபின், அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு தினகரன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சுகாசை எப்படி தெரியும்? யார் மூலம் இருவரும் அறிமுகமானார்கள்? என தினகரன், அவரது மனைவி அனுராதா மற்றும் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தினகரன் மற்றும் அனுராதாவின் மொபைல் போனிலிருந்த வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றங்கள், அழைப்புக்களின் விவரங்கள் ஆகியவை டெல்லி போலீசாரால் சோதிக்கப்பட்டது. இடைத்தரகர் எனக் கூறப்படும் சுகேஷூக்கு, சென்னையில் வைத்தே பணம் கைமாறியிருப்பதாக சந்தேகம் இருப்பதால், பணம் தினகரனின் மனைவி அனுராதா, உறவினர், அல்லது உதவியாளரின் கணக்குகளில் இருந்து மாற்றப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரது வீட்டில் லஞ்சப் பணம் கொடுத்தது குறித்து ஆவணங்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் தினகரனை ராஜாஜி பவனுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
    இதனிடையே, டெல்லியிலிருந்து விசாரணைக்கு உடன் அழைத்து வரப்பட்ட அவரது தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனாவை அவரது வீடு, தினகரன் அலுவலகம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தேர்தல் ஆணையத்திடம் பணம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் புகாரில், அதிகாரிகளை அணுகும் முன்னரே பிடிபட்டதாகக் கூறப்படுவதால், பணம் கைமாறியது குறித்த ஆவணத்தையும், அதற்கான ஆதாரங்களையும் நேரடியாகக் கைப்பற்றவே டெல்லியிலிருந்து அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக, தினகரனை கொச்சின் மற்றும் பெங்களூருவுக்கு டெல்லி போலீசார் அழைத்துச் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad