Header Ads

  • சற்று முன்



    திருவண்ணாமலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது.



    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே குடியிருப்புப் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.கீழ்பென்னாத்தூரை அடுத்த பள்ளியம்பட்டு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை, அகற்ற அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடையை மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மதுக்கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை சாலையில் வீசி உடைத்தனர்.
    மதுக்கடையை நிரந்தமாக மூடக்கோரி,ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad