Header Ads

  • BREAKING



    மின் பகிர்மான கழகங்கள் சுமார் ரூ. 900 கோடி மின்சார கொள்முதலில் நிலுவை- 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்.



    வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம், தினந்தோறும் ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. வல்லூர் தேசிய அனல் மின் நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், 67 சதவீதம் தமிழகத்திற்கும், மீதமுள்ள மின்சாரம் தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 13 மின் பகிர்மான கழகங்களுக்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 13 மின் பகிர்மான கழகங்களும், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையில், சுமார் 900 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நிலுவை தொகையை செலுத்தாததால், வல்லூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மற்றும் மூன்றாவது அலகுகளில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக, வெளிமாநிலங்களுக்கு பகிரப்படும் மின்சாரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
    இதனிடையே, காற்றாலைகளிலும், வெளிச்சந்தையிலும் மலிவான விலையில் மின்சாரம் கிடைப்பதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம், வல்லூர் அனல் மின் நிலையத்திலிருந்து அதிக விலையில் மின்சாரத்தை வாங்க தேவையில்லை என்பதால் அங்கு மின்சாரத்தை வாங்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad