Header Ads

  • BREAKING



    சட்டவிரோத மின்வேலியில் சிக்கி இரண்டு விவசாயிகள் பரிதாப பலி.



    விழுப்புரம் அருகே சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில், சிக்கி விவசாயிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தை சேர்ந்த குமார் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகும் காட்டுப்பன்றிகளை தடுக்க, நிலத்தை சுற்றிலும் சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், அருகாமையில் உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்த விவசாயிகள் வேலாயுதம் மற்றும் மகாதேவன் நேற்றிரவு அந்த விவசாய நிலம் வழியாக சென்றுள்ளனர். அப்போது, கீழே பொருத்தி வைக்கப்பட்டிருந்த மின்கம்பியை மிதித்து இருவரும் வயலிலேயே இறந்து கிடந்துள்ளனர். இதைக்கண்ட குமார், இருவரது உடலையும் அப்புறப்படுத்தி, மின்மோட்டாரில் குளித்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
    தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீஸார் சடலங்களை கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நிலத்தின் உரிமையாளர் குமாரை போலீஸார் கைது செய்தனர். வனவிலங்குகளை குறிவைத்து இவ்வாறு சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்கக் கூடாது என மின்வாரியம் பலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும், அவ்வாறு அமைப்பவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad