சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.
உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த கடல் வழிப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலப் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து தொடங்கினால் ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 4 மணி நேர பயண நேரம் வெறும் 45 நிமிடங்களாக சுருங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை