Header Ads

  • BREAKING



    கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை கிலோ தங்கம் வழிப்பறி – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு.


    சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, காரை வழிமறித்து ஒன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில் நகைக்கடை வைத்துள்ள பிரவீன் என்பவர், நேற்று இரவு தனது ஓட்டுநர் வெங்கட்ராமனிடம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளியைக் கொடுத்து, அமைந்தகரையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் காரில் வந்து கொண்டிருந்த வெங்கட்ராமனை வழிமறித்த மர்ம நபர்கள் 4 பேர், நகைக்கான ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டுள்ளனர். பின்னர், அவரைத் தாக்கிவிட்டு, தங்கம் மற்றும் வெள்ளியுடன், காரையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், வெங்கட்ராமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில், கண்காணிப்பு கேமராப் பகுதிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad