Header Ads

  • BREAKING



    106 வயதிலும் அசராது சமைக்கும் பாட்டிக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள்.


    உலகின் மிக மூத்த யூடியூப் நட்சத்திரமாக ஆந்திராவைச் சேர்ந்த 106 வயது பாட்டி உருவெடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் குதிவாதா கிராமத்தில் 106 வயதான மஸ்தானம்மா என்ற மூதாட்டி பழங்காலத்திய முறைகளில் ருசியான உணவு சமைக்கும் முறைகளை தமது பேரன் பேத்திகளின் கோரிக்கையை ஏற்று கற்றுத் தருகிறார். இதை அவரது பேரன் லக்ஷ்மணன், யூடியூபில் பதிவிடத் தொடங்கியதும் பாட்டியின் சமையலுக்கு உலகில் லட்சக்கணக்கானோர் ரசிகராகிவிட்டனர். கிரேனி-ஜி என வட இந்தியர்களாலும், கிரேனி என உலக சாப்பாட்டுப் பிரியர்களாலும் அழைக்கப்படும் மஸ்தானம்மாவின் வீடியோக்கள், யூடியூபில் வைரலாகப் பரவி வருகிறது. 106 வயதிலும் அசராமல் சமைத்து அசத்தும் மூதாட்டி மஸ்தானம்மா, தர்பூசணியின் கூட்டில் சிக்கன் செய்வது, மீன், நண்டு, காய்கறி முதல் பிரெட் ஆம்லெட் வரை செய்து அசத்துகிறார். உலகின் மிக வயதான யூடியூப் நட்சத்திரமாக ஜொலித்து வரும் மஸ்தானம்மா பாட்டி, தம்மை உலகமே பார்ப்பது குறித்து அறிந்ததும் பூரிப்படைகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad