Header Ads

  • BREAKING



    பயன்படுத்தப்படாமல் குப்பைபோல குவிக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ்கள்.



    சென்னை தாம்பரம் அருகே 150க்கும் மேற்பட்ட108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெயிலிலும் மழையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சாலை விபத்துகள் ஏற்படும் போது, காயமடைந்தவர்களை மருத்துவமனை கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மிகவும் பயனளிக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ்கள் போதிய அளவு இல்லாத நிலையில், தாம்பரம் சானடோரியம் பச்சையம்மன் மலை அடிவாரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீலான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் வெயிலிலும், மழையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ், இலவச தாய் சேய் ஊர்தி, அமரர் ஊர்தி என சுமார் 120கும் மேற்பட்ட பழுதடைந்த வாகனங்கள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அவற்றில் சில வாகனங்களை பழைய இரும்பிற்குக் கூட போட முடியாத நிலை உள்ளது. அதிலும் பல கோடி ரூபாய் பொது மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட 45 புதிய 108 ஆம்புலன்ஸ்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படாமல் குப்பை போல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் விபத்துகள் பெருகி, உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், பொது மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், இனியவது தாமதம் செய்யாமல், ஆம்புலன்ஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad