புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.67%.
புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. மாநிலத்தில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 93.67%. இது கடந்த ஆண்டைவிட 1.25% அதிகம்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 17 ஆயிரத்து 495 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இன்று காலை 10.10 மணிக்கு வெளியிட்டது.
அதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தேர்வு எழுதிய 17 ஆயிரத்து 495 மாணவ மாணவிகளில் 16 ஆயிரத்து 388 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.67 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட 1.25 சதவீதம் அதிகம் ஆகும்.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.11%. தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.78%. மாணவியர் மாணவர்களைவிட 4.40 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை:
பிரெஞ்சு
|
19
|
கணிதம்
|
425
|
அறிவியல்
|
242
|
சமூக அறிவியல்
|
1673
|
ஆங்கிலம்
|
-
|
தமிழ்
|
-
|
கருத்துகள் இல்லை