Header Ads

  • BREAKING



    எல்லையில் ஊடுருவ முயன்ற 12 வயதுச் சிறுவன் கைது.


    காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 12 வயதுச் சிறுவனை ராணுவத்தினர் கைது செய்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ரஜவ்ரி மாவட்டம் நவ்ஷேரா செக்டார் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஊடுருவ முயன்ற இந்தச் சிறுவனை ரோந்து சென்ற வீரர்கள் கைது செய்ததாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அந்தச் சிறுவனின் பெயர் அஷ்ஃபக் அலி சவுகான் என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பலுச் ரெஜிமண்ட் படை வீரரின் மகன் என்றும் தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனை ஊடுருவல் பாதைகள் தொடர்பான தகவல்களை திரட்ட தீவிரவாதிகள் அனுப்பியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad