Header Ads

  • BREAKING



    பிளஸ்டூ தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. எஸ்.எம்.எஸ்சில் மார்க்!


    12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. காலை 10 மணி முதல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில், மாணவ, மாணவிகள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும் என்றார். இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்படுகிறது. 17ம் தேதி அன்று பள்ளியில் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மறுகூட்டலுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் மொழி பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
    இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad