Header Ads

  • BREAKING



    ரூ.140 கோடி மதிப்பு வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.


    தமிழகம் முழுவதும் 140 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தில் 140 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்படவுள்ள 5 வெள்ளத்தடுப்புப் பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் பொதுப்பணித்துறை சார்பில், 155 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட 40 பாசனத் திட்டப்பணிகள், பாலம், சேவைச் சாலை, தரைப்பாலம், அரசு மாளிகை மற்றும் ஆய்வு மாளிகை கட்டிடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேபோல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 108 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல்நிலையங்கள், சிறைச்சாலை மற்றும் தீயணைப்புத்துறை கட்டிடங்களையும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad