மூங்கில் வீடுகள் அமைத்து புதிய தொழிலை தொடங்கிய தம்பதியர்.
குறைந்த விலையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மூங்கில் வீடுகளை ஹைதராபாதைச் சேர்ந்த தம்பதி அமைத்துள்ளனர். லிங்கம்- அருணா தம்பதியர் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற 150 வீடுகளைக் கட்டி முடித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத வீட்டு உபயோகப் பொருட்களைத் தேடி திரிபுரா மாநிலத்திற்கு போன போது மூங்கிலில் வீடு கட்டுவது பற்றி அறிந்துக் கொண்டதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால் இத்திட்டத்திற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை என்றும் பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறும் இந்த தம்பதி, பின்னர் இதன் அருமையை மக்கள் உணரத் தொடங்கியிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதே போன்று மூங்கில் சைக்கிள், பிளாஸ்டிக் டயர் போன்ற கழிவுகளால் அஸ்திவாரம் அமைப்பது போன்ற இதர திட்டங்களையும் இந்த தம்பதியர் முயற்சித்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை