15ந் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்: போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் வரும் 15ஆம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை 7 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கவும், முதற்கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்கவும் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் கோரி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுடன் ஏற்கெனவே நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், வரும் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து, சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளைச் சந்தித்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக 750 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்கப்படும் என்றும், தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை