Header Ads

  • BREAKING



    சொத்து கணக்கு காட்டாத 1,856 ஐஏஎஸ் அதிகாரிகள்.


    இந்திய நிர்வாக சேவையில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் கடந்த ஜனவரி மாதத்துக்குள் 2016-ம் ஆண்டுக்கான அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டது. தவறும் அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் மறுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
    அதன்படி 2016-ம் ஆண்டுக்கான அசையாசொத்து விவரங்களை 1,856 ஐஏஎஸ் அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் உ.பி.யில் 255 அதிகாரிகளும், ராஜஸ்தானில் 153, மத்தியபிர தேசத்தில் 118, மேற்குவங்கத்தில் 109, அருணாச்சல், கோவா, மிசோரம் மாநிலங்களில் தலா 104 அதிகாரிகளும் அடங்குவர். இதேபோல் தமிழகத்தில் 50, கர்நாடகாவில் 82, ஆந்திராவில் 81, பிஹாரில் 74, பஞ்சாபில் 70, மகாராஷ்டிராவில் 67 என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இந்த விதியை பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad