Header Ads

  • BREAKING



    வேலை- வீடு வாங்கி வருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த பெண்.


    கோவையில் அரசு வீடு மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 200க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்ததாக பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அனிதா என்பவர், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசு வேலை வாங்கி தருவதாகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் வீடு வாங்கி தருவதாகவும் கூறி 200க்கும் மேற்பட்டவர்களிடம், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. வீட்டுக்காக மட்டும் 150 பேரிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் வாங்கியதாகவும், ஒரு வருடம் ஆகியும் வீடு வாங்கி தராமல் அனிதா தலைமறைவாகி விட்டதாகவும், சபானா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.  இதையடுத்து, திண்டுக்கல்லில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த அனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad