Header Ads

  • BREAKING



    1 முதல் 12-ஆம் வகுப்பு வரையான பாடநூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை.


    1 முதல் 12-ஆம் வகுப்பு வரையான பாடநூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விலையில்லா பாடநூல்கள், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு ஜூன் 7 அன்று பள்ளிகள் திறக்கும்போது பாடநூல்கள் உறுதியாக மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விற்பனைக்கான பாட நூல்களை கடந்த ஆண்டு முதல் இணைய தளம் மூலம் தனியார் பள்ளிகள் பதிவு செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான இணையதள முகவரி – https://www.textbookcorp.in. மாணவர்கள், பெற்றோர், தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமும், பொது சேவை மையங்கள் மூலமும் பாடநூல்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு பாடநூல்கழகம் கூறியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad