சவூதி அரேபியா கருணை மன்னிப்பு திட்டத்தின் கீழ் 20,000 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்.
சவூதி அரேபியாவின் கருணை மன்னிப்புத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளனர்.சவூதி அரேபியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்றவர்களும், விசா காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு உதவும் வகையில் சவூதி அரேபிய அரசு பொதுமன்னிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் நாடு திரும்ப இந்தியர்களிடம் இருந்து கடந்த திங்கட் கிழமை வரை 20 ஆயிரத்து 321 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் தமிழர்கள் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை